நீங்கள் படித்த ஸ்கூலில் நான் ஹெட் மாஸ்டர்.! மாஸ் காட்டிய சசிகலா.! திகைத்த போலீசார்.! கடும் ஷாக்கில் அதிமுக.!
அதிமுக கொடியுடன் சசிகலா சென்னை நோக்கி வந்துகொண்டுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, கடந்த 27-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று மற்றும் உடல்நிலை கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா, கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்து, பெங்களூருவிலேயே ஒரு வீட்டில் ஒரு வாரம் தங்கி ஓய்வு எடுத்து வந்தார்.
இந்தநிலையில் ஒரு வாரம் கழித்து சசிகலா பெங்களூருவில் இருந்து இன்று, பிப்ரவரி 8 ஆம் தேதி புறப்பட்டு சென்னை புறப்பட்டார். இன்று சென்னைக்கு வரவிருக்கும் சசிகலா மருத்துவமனையிலிருந்து டிஸ்ஜார்ஜ் ஆகும்போது அவர் சென்ற காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து அதிமுக அமைச்சர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, சசிகலா காரில் அதிமுக கொடியை பொருத்த மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது.
அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என்று காவல்துறை அறிவுறுத்திய நிலையில் காரில் மீண்டும் அதிகமுக கொடியுடன் தமிழகம் புறப்பட்டார் சசிகலா.
சசிகலாவுக்கு தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் இருந்து சென்னை இல்லம் வரை சாலையின் இருமருங்கிலும் அமமுகவினர் திரண்டு நின்று வரவேற்பு அளிக்க உள்ளனர். பெங்களூருவில் இருந்து புறப்பட்ட சசிகலா, தமிழக எல்லைப்பகுதி அருகே வேறு காருக்கு மாறினார். வேறு காருக்கு மாறிய நிலையில் அவர் முன்பு வந்த காரில் இருந்த அதிமுக கொடி அகற்றப்பட்டது.
அந்த காரிலும் அதிமுக கொடியும் முன்புறம் ஜெயலலிதாவின் படமும் பொறுத்தப்பட்டிருந்தது. அந்த கார் அதிமுகவில் ஒன்றிய கவுன்சிலராக இருக்கும் எஸ்.ஆர்.சம்பங்கி என்பவரின் கார் என கூறப்படுகிறது. சசிகலா தமிழகத்தில் வரும்பொழுது அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என அதிமுக அமைச்சர்கள் எதிர்பார்த்த நிலையில் அதிமுக அடிப்படை உறுப்பினரின் வாகனத்தில் அதிமுக கொடியுடன் சசிகலா சென்னை நோக்கி வந்துகொண்டுள்ளார். அதிமுக கொடியுடன் சசிகலா வரும் புகைப்படத்தை வெளியிட்டு, "நீங்கள் படித்த ஸ்கூலில் நான் ஹெட் மாஸ்டர்" என சசிகலாவை புகழ்ந்து வருகின்றனர் அ.ம. மு. கவினர்.