அரசு, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது துவங்குகிறது? கல்வித்துறை உத்தரவு!
school admission start from tomorrow
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் கடந்த மார்ச் மாதம் முதலே மூடப்பட்டது.பொதுவாக அனைத்து வருடமும் புதிய கல்வி ஆண்டானது ஜூன் மாதத்தில் துவங்கும். இதற்கான மாணவர்கள் சேர்க்கை இரண்டு மாதங்களுக்கு முன்பே துவங்கிவிடும்.
ஆனால் கொரோனாவின் காரணமாக எந்த பள்ளிகளும் திறக்கப்படாததால் 2020-21 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறாமல் உள்ளது. இந்தநிலையில் குழந்தைகளை எப்போது பள்ளியில் சேர்ப்பது, ஏற்கனவே படித்துக்கொண்டிருந்த குழந்தைகள் எப்போது பள்ளிக்கு போவார்கள் என்ற கேள்வி பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.
இந்தநிலையில், அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, 1ஆம் வகுப்பு, 6ஆம் வகுப்பு மற்றும் 9ஆம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 17 ஆம் தேதியிலும் 24 ஆம் தேதியில் இருந்து மேல்நிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்க அரசு, தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், சமூக இடைவெளியை பின்பற்றி, உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன், மாணவர் சேர்க்கை பணிகளை நடத்த வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.