சிறிய வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு; அதிரடி மாற்றங்களுடன் புது பொலிவாகும் பள்ளிக்கல்வி.!
school educational department tamilnadu
இனி, 5 ஆம் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் தான் அதிகமாக உள்ளது. பெற்றோர்களும் தனியார் பள்ளிகள் தான் சிறந்தது என பிள்ளைகளை அங்கேயே சேர்க்கின்றனர். இதனை முறியடிக்கும் விதமாக தற்போதை பள்ளிக் கல்வித்துறை கல்வி தரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சமீபத்தில், அரசு பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5ம் வகுப்பு மற்றும் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டில் 4 விதமான சீருடைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக தற்போது, இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் மத்திய அரசு 5 ஆம் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வை நடத்தும் வழிமுறைகளை கொண்டு வந்துள்ளது.
இதனை பின்பற்றி தமிழகத்திலும் அந்த வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனால் இந்த பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அதே வகுப்பில் தொடர்வார்களா அல்லது அடுத்த வகுப்பிற்கு செல்வார்களா என்பது தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.