தமிழகத்தை உலுக்கிய கோவை மாணவி தற்கொலை விவகாரம்.! குண்டுகட்டாக பள்ளி முதல்வரை தூக்கிய போலீசார்.!
தமிழகத்தை உலுக்கிய கோவை மாணவி தற்கொலை விவகாரம்.! குண்டுகட்டாக பள்ளி முதல்வரை தூக்கிய போலீசார்.!
கோவையில் தனியார் பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது. போலீசார் நடத்திய விசாரணையில், கோவை மாவட்டத்தில் உள்ள சின்மயா வித்யாலயா தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வந்த மாணவியை பள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி வந்ததும், பள்ளியை விட்டு வெளியேறி வேறு பள்ளிக்கு மாணவி சென்ற பின்பும் மாணவியை துன்புறுத்தியதும் விசாரணையில் தெரிய வந்தது.
ஆசிரியரின் தொடர் துன்புறுத்தல்கள் குறித்து அந்த மாணவி தனது பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் மீரா ஜாக்சன் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த அந்த மாணவி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக கோவையில் போராட்டம் வலுத்தது.
இதனையடுத்து பள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி கைது செய்யப்பட்டார். இவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்ய வேண்டும் என்று நேற்று பள்ளி வளாகம் முன் பொது மக்கள் போராடி வந்தனர். மாணவியின் தற்கொலை சம்பவத்தில் தொடர்புடைய எல்லோரையும் கைது செய்ய வேண்டும் எனவும் முழக்கமிட்டனர்.
இதனையடுத்து பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கும் பதியப்பட்டது. இதனால் தான் கைது செய்யப்படுவோம் என்று தெரிந்து மீரா ஜாக்சன் தலைமறைவானார். இதனையடுத்து தனிப்படை போலீசார் மீரா ஜாக்சனை பெங்களுருவில் வைத்து கைது செய்தனர். மேலும், அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.