தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி எப்போது? கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அனைத்து பள்ளிகளும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அனைத்து பள்ளிகளும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே மூடப்பட்டது. தமிழ் நாட்டில் பள்ளிகள் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்து வந்ததால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதே போல் கொரோனா 2-வது அலை தீவிரம் காரணமாக, 12-ம் வகுப்பு பொது தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. 10 மற்றும் 11-ம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளது..
இந்த நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தாலும், பள்ளிகள் திறப்பு குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் திருச்செந்தூரில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கொரோனா தொற்றின் மூன்றாவது அலை குறித்து மருத்துவர்களின் ஆலோசனை பெற்ற பின்னரே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.