10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியர்.! கொந்தளித்த சக மாணவிகளின் பெற்றோர்.!
10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியர்.! கொந்தளித்த சக மாணவிகளின் பெற்றோர்.!
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் அதனை தடுக்க பல்வேறு சட்டங்களை இயற்றியும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளையும் வழங்கி வருகிறது. ஆனாலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாள்தோறும் நடந்து வருகிறது. இந்தநிலையில் நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் தனது வாட்ஸப் ஸ்டேட்டசில், கடந்த 4-ந் தேதி பிறந்தநாள் என்றும், இறப்பு தேதி (4.12.2021) எனக் குறிப்பிட்டு பதிவு செய்து உள்ளார். இதனைப் பார்த்த சக மாணவிகள் அதிர்ச்சியடைந்து செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் பதில் இல்லாததால், சக மாணவிகளின் பெற்றோர், சம்பந்தப்பட்ட மாணவி வீட்டுக்கு சென்று பார்த்தனர்.
அப்போது அந்த மாணவி தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். இதனையடுத்து அந்த மாணவியை தடுத்துள்ளனர். தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து கேட்டபோது, அந்த பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் மதிவாணன் என்பவர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொள்வது குறித்து தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அந்த மாணவியின் நிலைக்கு காரணமான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் பாலியல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மதிவாணனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.