மாணவிகள் கொடுத்த பாலியல் புகார்.! ஆசிரியை அவமானத்தில் தூக்கிட்டு தற்கொலை.!
மாணவிகள் கொடுத்த பாலியல் புகார்.! ஆசிரியை அவமானத்தில் தூக்கிட்டு தற்கொலை.!
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவரின் மனைவி லில்லி. இவர் அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இதே பள்ளியில் மோகன்தாஸ் என்பவர் தமிழாசிரியராக பணிபுரிந்துள்ளார்.
மோகன்தாஸ் அப்பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இதுகுறித்து வெளியே கூறக்கூடாது என்றும் மாணவிகளை மிரட்டி வந்துள்ளார். ஆசிரியர் மோகன்தாஸின் தொல்லை தாங்காமல் பாதிக்கப்பட்ட மாணவிகள், ஆங்கில ஆசிரியை லில்லியிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர்.
ஆனால் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமலும், அந்த ஆசிரியரை கண்டிக்காமலும் இருந்துள்ளார் லில்லி. மேலும் பாதிக்கப்பட்ட மாணவிகளை மிரட்டியதோடு, ஆசிரியர் மோகன்தாசுக்கு உடந்தையாகவும் இருந்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மோகன்தாஸை போக்சோ சட்டத்தின் கீழ், போலீசார் கைது செய்தனர். மேலும், பாலியல் சம்வத்திற்கு உடந்தையாக இருந்த, சக பள்ளி ஆசிரியை லில்லி மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், தனது தாய் வீட்டுக்கு சென்ற ஆசிரியை லில்லி, தனக்கு ஏற்பட்ட அவமானத்தால் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் பள்ளி ஆசிரியை லில்லியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.