பாம்பனில் பச்சை நிறத்தில் மாறிய கடல் நீர்: ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்த மக்கள்..!
பாம்பனில் பச்சை நிறத்தில் மாறிய கடல் நீர்: ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்த மக்கள்..!
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் குந்து கால் அருகே உள்ள சிங்கிலிதீவு முதல் தூத்துக்குடி வரையிலான பகுதிகள் மன்னார் வளைகுடா என்று அழைக்கப்படுகிறது. இந்த மன்னார் வளைகுடா பகுதியில் 21 தீவுகள் அமைந்துள்ளன. இந்த 21 தீவுகளை சுற்றி உள்ள கடல் பகுதியில் ஆமை, கடல் பசு, டால்பின், நட்சத்திரமீன்கள், பவளப்பாறைகள், கடல் குதிரை, கடல் பன்றி உள்ளிட்ட 3600 வகையான அரிய கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
இவற்றை தவிர இந்த பகுதியில் இயற்கையாகவே கடலில் பல வகையான பாசிகளும் வளர்ந்து நிற்கின்றன. இந்த நிலையில் ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் தென்கடல் மற்றும் ரயில்வே பாலத்தீற்கு அடிப்பகுதியில் உள்ள வடக்கு கடல் பகுதிகள் அடங்கிய பகுதிகளில் கடல் நீர் பச்சை நிறமாக நேற்று முதல் காட்சியளித்து வருகின்றது.