4 வயது குழந்தைக்கு தாயின் கணவரால் நேர்ந்த உச்சகட்ட கொடூரம்!! வாக்குமூலத்தை கேட்டு ஆடிப்போன போலீசார்!!
second husband kille wife first husband daughter
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் ரமேஷ். பந்தல் போடும் வேலை பார்த்துவந்த இவர் பவானி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அவர்களுக்கு யாழினி என்ற 4 வயது குழந்தையும், ஒன்றரை வயது ஆண்குழந்தையும் உள்ளது. அவர்கள் குடும்பத்துடன் கொடுங்கையூர் கிராமத்தில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரமேஷ் காச நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு பவானி ரமேஷைப் பிரிந்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் அதே பகுதியை சேர்ந்த ஆசிப் என்ற இளைஞரை 2வது திருமணம் செய்து கொண்டு புழல் பகுதியில் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் தனது 4 வயது மகள் யாழினிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக பவானி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அங்கு குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குழந்தை இறந்த தகவலறிந்த முதல் கணவர் ரமேஷ் குழந்தையின் உடம்பிலும், வயிறு பகுதியிலும் காயங்கள் இருப்பதை கண்டுள்ளார். அதனை தொடர்ந்து பவானி அவரது இரண்டாவது கணவருடன் சேர்ந்து குழந்தையை அடித்துக்கொலை செய்துவிட்டதாக ரமேஷ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட பொது ஆசிப் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். பின்னர் பவானியுடன் உல்லாசமாக இருக்க இடையூறாக இருந்ததால் குழந்தை யாழினியின் உடலில் சிகரெட்டால் சூடு வைத்ததையும், பின்னர் அவரை கொலை செய்ய்ய முடிவு செய்து பவானி வெளியில் சென்ற நேரத்தில் யாழினியை அடித்து அடிவயிற்றில் ஓங்கி உதைத்ததாக கூறியுள்ளார்.இதனை தொடர்ந்து போலீசார் அவர்மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.