×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரித்தீஷின் இழப்பால் பதறிப்போன சீமான்! ரித்தீஷ் குறித்து சீமான் உருக்கமான பேச்சு!

seeman talk about Rithish

Advertisement


பிரபல நடிகரும் முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்திஷ் தனது சொந்த ஊரான ராமநாதபுரத்தில் திடீர் மாரடைப்பால் நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 46. இவர் தமிழ் சினிமாவில் சின்னப்புள்ள,  காணல் நீர், நாயகன், பெண் சிங்கம் போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபமாக வெளியான LKG படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரித்தீஷ்.

சினிமா பிரபலங்கள், நலிவடைந்த கலைஞர்கள், ஏழை மக்கள் என பலருக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளார் ரித்தீஷ். இந்நிலையில் இவரது மறைவு அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவரது உயிரிழப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், எனது தம்பி ரித்தீஷ் இறந்துவிட்டார் என்ற தகவலை கேட்டு எனது இதயம் நொறுங்கிபோனது. ரித்தீஷின் சிறுவயது வளர்ச்சியில் இருந்து நான் இருந்தவன். நிறைய கனவுகளோடு இருந்தவன். பல்வேறு சூழ்நிலைகளில் எனக்கு உறுதுணையாக இருந்தவன்.

ரித்தீஷின் இழப்பு தற்போதுவரை நம்பமுடியாமல் இருக்கிறது. எப்படி இதனை ஆறுதல் படுத்திக்கொள்வது என்றே  தெரியவில்லை. கண்டிப்பாக ரித்தீஷின் பிள்ளைகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன் என கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#seeman #rithish passed away
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story