வாவ்!! சூப்பர் திட்டம்!! உங்க வீட்டு மின்கட்டணத்தை நீங்களே கணக்கிட மின்சார வாரியம் அனுமதி!!
மே மாதத்திற்கான மின் கட்டணத்தை நுகர்வோரே கணக்கிட மின்சார வாரியம் அனுமதி அளித்துள்ளது. மின்
கொரோனா ஊரடங்கு காரணமாக மே மாதத்திற்கான மின் கட்டணத்தை நுகர்வோரே கணக்கிட மின்சார வாரியம் அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பினால் தற்போது முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இதனால் மே மாதத்திற்கான மின் கட்டண மதிப்பீடு குறித்து பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. கடந்த ஆண்டு ஊரடங்கு சமயங்களில் முந்தைய மாத மின் கட்டணமே வசூலிக்கப்பட்டது.
அதேபோல் இந்தமுறையும் வசூலிக்கப்படுமா? அல்லது இதில் மாற்றம் ஏற்படுமா என கேள்வி எழுந்த நிலையில், இதற்கு அருமையான வழியை தேர்வு செய்துள்ளது தமிழக மின்சாரத்துறை. அதன்படி, வாடிக்கையாளர்கள் மின் மீட்டரில் உள்ள அளவை புகைப்படமாக எடுத்து, அதனை மின்வாரிய உதவி பொறியாளருக்கு அனுப்பிவைத்து, ஆன்லைனில் மின் கட்டணத்தை செலுத்த மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
இதனால் வாடிக்கையாளர்கள் அதிகமான கட்டணமோ அல்லது குறைவான கட்டணமோ செலுத்த தேவை இல்லை. இந்த புதிய வழிமுறை மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.