ஆன்லைனில் தேர்வு கிடையாது.! உயர் கல்வித்துறை அதிரடி.!
ஆன்லைனில் தேர்வு கிடையாது.! உயர் கல்வித்துறை அதிரடி.!
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே மூடப்பட்டது. கல்லூரிகள் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்து வந்ததால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடத்தப்பட்டு வந்தது. தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்ததை தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கல்லூரி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு மேலாக கொரோனா காரணமாக நேரடி வகுப்புகள் நடைபெறாத நிலையில், கடந்த ஒன்றரை மாதங்களாக மட்டுமே நேரடியாக வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில், ‘நேரில் தேர்வு எழுத முடியாது. ஆன்லைனில்தான் தேர்வு வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் என அனைத்து வகை கல்லூரிகளிலும் தேர்வுகள் நேரடியாகவே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.