காப்பகத்தில் தங்கி இருக்கும் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்... காப்பக நிர்வாகி மீது பாய்ந்த நடவடிக்கை.!
காப்பகத்தில் தங்கி இருக்கும் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்... காப்பக நிர்வாகி மீது பாய்ந்த நடவடிக்கை.!
திருப்போரூர் அருகே காப்பகத்தில் தங்கியிருக்கும் பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்ட காப்பக நிர்வாகி கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்போரூர் அருகே பனங்காட்டுப்பாக்கம் என்ற பகுதியில் பெண்கள் முதியோர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கான காப்பகம் ஒன்று அன்பகம் என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது. 1999 ஆம் ஆண்டு முதல் வீரமணி என்பவர் இதனை நடத்தி வருகிறார். இந்த காப்பகத்தில் பெண்கள் முதியோர் மனவளர்ச்சி குன்றியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 50க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த காப்பகத்தில் தங்கியிருக்கும் பெண் ஒருவருக்கு காப்பக நிர்வாகி வீரமணி பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் சமூக வலைதளத்தில் இது குறித்து பதிவிட்டு இருக்கிறார். அந்தப் பதிவின் அடிப்படையில் தாம்பரம் கோட்டாட்சியர் செல்வகுமார் விசாரணை மேற்கொண்டு வீரமணி குற்றவாளி என்று தெரிந்து கொண்ட பின் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த காப்பக விவகாரம் குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல் நாத் "இந்த காப்பகம் உரிய அனுமதியின்றி அரசு மெய்க்கால் மற்றும் புறம்போக்கு இடத்தில் இயங்கி வருகிறது என்றும் வெகு விரைவிலேயே இதற்கு சீல் வைக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.