என்னுடன் வாழாமல் போனவள் மானத்துடன் வாழக்கூடாது... கணவனின் வக்கிர செயல்..!!
என்னுடன் வாழாமல் போனவள் மானத்துடன் வாழக்கூடாது... கணவனின் வக்கிர செயல்..!!
விவாகரத்தான மனைவியின் ஆபாச படங்களை இணையதளத்தில் பதிவிட்ட கணவனை கைது செய்த காவல்துறையினர்.
கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியை சேர்ந்த 32 வயது பெண்ணிற்கும் தோவாளை பகுதியை சேர்ந்த சதீஷ் பெருமாள் (34) என்பவருக்கும் கடந்த பத்து வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. சதீஷ் பெருமாள் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார்.
கணவன், மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது 9 வயது மகளை அவரது மனைவி வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், சதீஷ் பெருமாள் இருவரும் சேர்ந்து வாழ்ந்த போது, தனிமையில் இருந்த ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை, இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அவரது முன்னாள் மனைவி காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் சைபர்கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.அதன் பின்னர் சதீஷ் பெருமாளை கைது செய்து விசாரணை செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
காவல்துறையினரின் விசாரணையில் சதீஷ் பெருமாள் இவ்வாறு கூறியுள்ளார். என்னுடன் வாழாமல் போனவள், மானத்துடன் வாழ கூடாது என்று நினைத்து ஆபாச வீடியோவை பதிவேற்றம் செய்தேன் என்று கூறியுள்ளார்.