×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடடே.. நம்ம செங்கோட்டைக்கு இப்படியொரு பெரிய வரலாறா?.. எல்லை பிரிப்புக்கு பின் வீழ்ச்சியடைந்த சோகம்.. விபரம் உள்ளே.!

அடடே.. நம்ம செங்கோட்டைக்கு இப்படியொரு பெரிய வரலாறா?.. எல்லை பிரிப்புக்கு பின் வீழ்ச்சியடைந்த சோகம்.. விபரம் உள்ளே.!

Advertisement

 

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும், தாலுகாவுக்கும், ஊருக்கும் வரலாறுகள் என்பது இருக்கின்றன. இவற்றில் நாம் பொதிகை மலைச்சாரலில் உள்ள செங்கோட்டையை பற்றி நன்கு அறிந்திருப்போம். 

தமிழ்நாடு வெதர் பிளாக் பக்கத்தில் செங்கோட்டையில் அறிய தகவல் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. அதன் தகவலில் கூறப்பட்டுள்ளதாவது,  

"கேரளா மாநிலத்துடன் இருந்த கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டை தமிழகத்துடன் இணைந்த தினம் இன்று (01-11-2023) தமிழகத்துடன் இணைந்த தென்காசி மாவட்டத்தின் ஒரு பகுதி  வளர்ச்சியடைந்ததா? பாகப்பிரிவினையின் சோக வரலாறு குறித்து பார்ப்போம். தென்காசி மாவட்டத்தில் இருக்க கூடிய செங்கோட்டை மிகப்பெரிய தாலுகாவாக இருந்துள்ளது. தமிழகத்துடன் இணைக்கப்படும் போது செங்கோட்டை தாலுகாவை பிய்த்து பாதி கேரளா தக்க வைத்து கொண்டது. மீதி பாதியை  தமிழகத்துக்கு வழங்கி விட்டது. 

குற்றாலம் பிரானூர் பார்டர் பகுதியிலிருந்து மேற்கு பகுதி முழுவதும் மலையின் பெரும்பான்மை நிலப்பரப்பை கொண்டிருந்தது செங்கோட்டை தாலுகா. செங்கோட்டையை பொறுத்தவரை மலைவளம் மிக்க பகுதி கேரளத்துடனும் சமதளபகுதியை தமிழகத்துடனும் இணைக்கப்பட்டது. இதனால் செல்வாக்கும் வணிகமும் மேலும் பல வசதிகளும் அனுபவித்து வந்த நிலப்பரப்பை சேர்ந்தவர்கள் இந்த 60 ஆண்டுகள் கழித்து பின்னோக்கி   பார்க்கும் போது தாங்கள் ஏதோ ஏமாற்றப்பட்டதாகவும் முன்னேற்றம் தடைப்பட்டதாகவும் எண்ணத் தொடங்கியிருக்கிறார்கள்.

செங்கோட்டை பேருந்து நிலையம் கேரளா பேருந்துகளால் நிரம்பி வழியும் . கேரள பேருந்துகள் நிறுத்துவதற்கு என்று தனிப்பகுதி இருக்கும். மலைப்பகுதியில் இருந்து மிளகு தேன் விவசாயிகள் எடுத்து வந்து கீழ்பகுதியில் விற்பனை செய்து விட்டு செல்வர். பின்னர் தமிழகத்துடன் இணைக்கப்பட்ட பிறகு கேரள பேருந்துகள் தென்காசி வரை நீட்டிக்கப்பட்டது.

S.H கல்யாணசுந்தரம் செங்கோட்டை திருவாங்கூர் சமஸ்தானத்தின் இருந்த கடைசி தாசில்தார்.  தமிழகத்துடன் இணைக்கப்பட்ட செங்கோட்டை தாலுகாவின் முதல் தாசில்தாரும் இவரே .தமிழகத்துடன் இணைக்கப்பட்ட பிறகு இவருக்கு உரிய மரியாதையோ சலுகையோ வழங்கப்படவில்லை. தமிழின் மீதான பற்று காரணமாக தமிழகத்துடன் இணைக்க போராடினார். பின்னாளில் தான் எடுத்த முடிவு பற்றி வருத்தப்பட்டார் .

தற்போது பெரியவர்கள் சொல்வது எப்படி இருக்க வேண்டிய பேரூர் செங்கோட்டை தற்போது பாதி அளவுக்கு கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் தாரை வார்க்கப்பட்டது. ஒரு தொகுதி அந்தஸ்தை இழந்து விட்டது. தற்போது தென்காசி தொகுதியில் செங்கோட்டை உள்ளது. 

மேலும் தென்காசி நகராட்சி ஆகுவதற்கு முன்பே 1921 ம் ஆண்டிலே  செங்கோட்டை நகராட்சி ஆனது. இது ஒரு பழமையான நகராட்சியாகும். தமிழகத்துடன் இணைக்கப்பட்ட பிறகு சில ஒப்பந்தம் போடப்பட்டது. தற்போது  தலைமை மருத்துமனை தலைமை தாலுகா அலுவலகம் நீதிமன்றம் எப்படி இயங்குகிறதோ அதன் நிலைக்கு ஒரு குறைவும் வர கூடாது. அதை எக்காரணம் கொண்டு மாற்றவோ நீக்கவோ கூடாது என்று ஒப்பந்தம் போடப்பட்டது. 

தென்மலை ஆரியங்காவு உள்ளிட்ட அனைத்து பகுதிகளுமே செங்கோட்டையுடன் இருந்தது. கேரளாவுடன் இணைக்கப்பட்ட பிறகு செங்கோட்டையில் இருந்த தொழில் வளங்கள் மற்றும் கல்லூரி அனைத்தும் மூடப்பட்டது.  செங்கோட்டை தமிழகத்துடன் இணைக்கப்பட்ட பிறகு அதன் வளர்ச்சி அறவே இல்லை வளமை மிக்க மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியை இழந்தது தான் மிச்சம் என்று பெரியவர்கள் ஆதங்கத்துடன் பதிவிடுகிறார்கள். இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர்  1ம் தேதியை கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டை தின நாளாக கொண்டாடுகிறோம்.

முழுமையாக தமிழகத்துடன் இணைக்கப்பட்டிருக்கலாம். பிரம்மாண்டமாக இருந்த தாலுகா பாதி அங்கும் பாதி இங்கும் இணைப்பு கண்டுள்ளது.இதன் காரணத்தால் தான் அந்த ஏக்கம் இன்று வரை தென்காசி மாவட்டத்தில் இருக்கிறது. தமிழக அரசு தாய் பார்வையுடன் தென்காசி மாவட்டத்தில் இருக்க கூடிய செங்கோட்டை தாலுகாவின் முன்னேற்றத்துக்கு வழிவகை செய்ய வேண்டும். 

பசுமையும் பல நூற்றுகணக்கான அருவிகளை தன்னகத்தே கொண்டுள்ள செங்கோட்டையை பாதுகாப்பது நம் தலையாய கடமை.  

படம் :தற்போது வரை கேரளா அரசு சங்கு முத்திரையுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் செங்கோட்டை நுழைவு வாயில்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பதிவு வைரலாகி வருகிறது. ஆனால், இதற்கு ஆதரவும், எதிர் கருத்துக்களும் கமெண்டில் குவிந்து வருகிறது. 

நன்றி: Tamilnadu Weather Blog 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Shenkottai #Tamilnadu Weatherman Blog
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story