திருச்சியில் அதிர்ச்சி.. வட மாநில கட்டிட தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்.!
திருச்சியில் அதிர்ச்சி.. வட மாநில கட்டிட தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்.!
ஒடிசா மாநிலம் கன்சாம் மாவட்டத்தை சேர்ந்த பி.பிரபாகர் தாஸ் திருச்சி பஞ்சப்பூரில் கட்டபட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தில் கட்டுமான பணி செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று பிரபாகர் தாஸ் கட்டுமான வேலையில் ஈடுபட்டிருந்தபோது தீடிரென மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்த சக வேலையாட்கள் அதிர்ச்சி அடைந்து அவரை எழுப்ப முயற்சித்துள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் பிரபாகர் தாஸ் மயக்க நிலையில் இருந்ததால் உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து அங்கு பிரபாகர் தாஸை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த எடமலைப்பட்டிபுதூா் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து காவல் துறையினர் பிரபாகர் தாஸ் இறபிற்காண காரணத்தை கண்டறிய அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர். மேலும் கட்டிட பணி செய்து கொண்டிருந்த வட மாநில தொழிலாளி மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.