ஷாக்.. இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி செய்தி.. கிடுகிடுவென உயரும் தக்காளி விலை..!
ஷாக்.. இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி செய்தி.. கிடுகிடுவென உயரும் தக்காளி விலை..!
தமிழகத்தைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளிலிருந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் விவசாயிகள் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் இந்த மழையால் அறுவடைக்கு தயாரான நிலையில் இருக்கும் பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழுகி வருகின்றன.
அந்த வகையில் தென் மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள தக்காளி பழங்கள் மழையால் சேதமடைந்தும் அழுகியும் வருகின்றன. மேலும் அதிக மழை பெய்து வருவதால் தக்காளி செடியில் உள்ள பூ மற்றும் காய்கள் மழையில் அழுகி உதிர்ந்து விடுவதாக தக்காளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் தக்காளியின் வரத்து படிப்படியாக குறைய கூடும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் வரும் நாட்களில் தக்காளியின் விலை மீண்டும் உச்சத்தை தொடும் அபாயம் உள்ளதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் விவசாயிகள் பலரும் மீண்டும் தக்காளி சாகுபடி செய்ய தங்கள் நிலங்களை ஆயத்தப்படுத்தி வருகின்றனர்.