அதிர்ச்சி..கலை கல்லூரி மாணவி தற்கொலை..போலிஸார் விசாரணை..!
அதிர்ச்சி..கலை கல்லூரி மாணவி தற்கொலை!! போலிஸார் விசாரணை..
நரசிங்கபுரம் கானாபாடி கிராமத்தைச் சோந்தவா் செந்தில். இவரது மகள் ஜானகி நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவர் கல்லூரிக்கு அருகில் இருக்கும் விடுதியில் தங்கி படித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று ஜானகி கல்லூரி முடித்து விட்டு மதியம் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் யாருமில்லாத நிலையில் ஜானகி தனியாக இருந்துள்ளார். இதனையடுத்து ஜானகியின் வீட்டிற்கு வந்த அவருடைய தாத்தா கதவை நீண்ட நேரம் தட்டியும் ஜானகி திறக்காமல் இருந்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த ஜானகியின் தாத்தா ஜன்னல் வழியே பார்த்தபோது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாத்தா அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று ஜானகியை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு ஜானகியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து உப்பிலியபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.