கணவன் மூன்றரை அடி, மனைவி 3 அடி! திருமண பந்தத்தில் இணைந்த கடலூர் ஜோடி! மகிழ்ச்சியில் மக்கள்.
Short girl and boy married in kataloor
கடலூர் மாவட்டம் புவனகிரி என்னும் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் பெயர் ஜெயபிரகாஷ். தனது வீட்டின் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார் ஜெயபிரகாஷ். பிறந்ததில் இருந்தே வளர்ச்சி குறைவான ஜெயபிரகாஷ் தற்போது 3.5 அடி உயரம் மட்டுமே உள்ளார்.
இவருக்கு இவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் பெண் தேடியுள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் மொட்டணம்பட்டி எனும் பகுதியில் ஜெயபிரகாஷை விட குறைவான உயரம் கொண்ட அதாவது வெறும் 3 அடி மட்டுமே உயரம் கொண்ட வீராச்சாமி என்பவரின் மகள் கலைச்செல்வி பற்றி ஜெயபிரகாஷ் வீட்டிற்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து இரு வீட்டாரும் சம்மதம் பேசி, ஜெயபிரகாஷ் மற்றும் கலைச்செல்விக்கு நேற்று விமர்சியாக திருமணம் முடித்துளனர். கணவன் - மனைவி இருவரையும் வாழ்தியதோடு இவர்கள் திருமணம் மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.