தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கள்ளச்சாராயம் குடிச்சவனுக்கு 10 இலட்சம் எங்களுக்கு 5 தானா? - மின்சாரம் தாக்கி மாணவர் பலி., உறவினர்கள் போர்க்கொடி.!

கள்ளச்சாராயம் குடிச்சவனுக்கு 10 இலட்சம் எங்களுக்கு 5 தானா? - மின்சாரம் தாக்கி மாணவர் பலி., உறவினர்கள் போர்க்கொடி.!

   Sivagangai Karaikudi Student Dies Electrocution  Advertisement

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, பொய்யாவயல் கிராமத்தை சேர்ந்தவர் கைலாசம். இவரின் மகன் சக்தி சோமையா (வயது 14). இவர் அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பயின்று வந்தார். நேற்று வழக்கம்போல பள்ளிக்குச் சென்ற சிறுவன், கணினியை இயக்க பிளாக் பாயிண்டில் கைவைத்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். 

சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று அனுமதி செய்தபோது மரணம் உறுதி செய்யப்பட்ட நிலையில், தகவல் அறிந்து வந்த உறவினர்கள் போராட்டம் மேற்கொண்டனர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த முதல்வர், தனது இரங்கலை பதிவு செய்தார். மேலும், குடும்பத்திற்கு ரூ.5 இலட்சம் நிதிஉதவி அறிவிக்கப்படும் எனவும் கூறினார்.

உறவினர்கள் போரட்டம்

இதனிடையே, சிறுவனின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், சிறுவனின் குடும்பத்தில் பெண் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 இலட்சம் இழப்பீடு, எங்களுக்கு ரூ.5 இலட்சம் இழப்பீடு முறையானது அல்ல, கூடுதலாக இழப்பீட்டுத் தொகை வேண்டும் என குரல் உயர்த்தினர். மாவட்ட ஆட்சியரும் அரசு வேலை தருவதாக உறுதி அளித்தார். 

இதையும் படிங்க: சிவகங்கை: பள்ளியில் மின்சாரம் தாக்கி 14 வயது சிறுவன் மரணம்; தலைமை ஆசிரியர், ஆசிரியர் பணியிடைநீக்கம்.!

Electric Attack

மேலும், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர், அதன்படி ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பணி ஆணை உடனடியாக வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

உறவை இழந்த ஆதங்கத்தில் இனி இதுபோல துயரம் நடக்க கூடாது என பல இடங்களில் போராட்டம் நடந்து இருக்கும். ஒருசில இடத்தில் ஆவேசத்தில் அலுவலகமோ/வாகனமோ அடித்து நொறுக்கப்படும். ஆனால், உறவினர்கள் அதிகம் பணம் கேட்டு போராட்டம் நடத்திய சம்பவம் நடந்துள்ளது.

இதையும் படிங்க: எலுமிச்சை பறிக்கச் சென்று உயிரைவிட்ட பெண்; அலட்சிய அதிகாரிகளால் திருவள்ளூரில் சோகம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Electric Attack #Karaikudi Student Dies #sivagangai #சிவகங்கை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story