×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கட்டை விரலில் பாம்பு கடித்து பெண் உயிர் ஊசல்; மழை நேரத்தில் கவனம்.. வெளியான அதிர்ச்சி தகவல்.! 

கட்டை விரலில் பாம்பு கடித்து பெண் உயிர் ஊசல்; மழை நேரத்தில் கவனம்.. வெளியான அதிர்ச்சி தகவல்.! 

Advertisement

காரைக்கால் அரசு மருத்துவமனையில், பாம்பினால் தீண்டப்பட்ட பெண் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரின் கணவர், ஸ்நேக் சாகா என்ற பாம்பு பிடிப்பவரிடம் உதவி கேட்டிருந்த காணொளி வெளியாகியுள்ளது. 

அதன்படி, லாரி ஓட்டுநர் பணி நிமித்தமாக ஹைதராபாத் சென்றுள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி இருக்கிறார். தற்போது ஓட்டுநர் ஹைதராபாத் சென்றதால், பெண்மணி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

சம்பவத்தன்று பெண்மணி உறங்கிக்கொண்டு இருந்தபோது, நள்ளிரவு நேரத்தில் காலில் எதோ கடித்தது போல தோன்றியுள்ளது. விழித்து செல்போன் டார்ச்சை ஆன் செய்து பார்த்தபோது, காலின் கட்டை விரலை பாம்பு ஒன்று கடித்தது தெரியவந்துள்ளது. 

இதையும் படிங்க: "மரண பயத்த காமிச்சிட்டாங்க பரமா" - நொடியில் ஷாக் தந்த பாம்பு; காட்சிகள் வைரல்.!

பாம்பு கடித்தது

இதனால் பதறிப்போன பெண்மணி அலற, விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர் பாம்பை அடித்துக் கொன்றனர். ஆனால், அந்த பாம்புக்கு அருகே வேறொரு பாம்பு ஒன்றும் இருந்துள்ளது. கட்டுவீரியன் பாம்பு பெண்ணை கடித்ததாக கூறும் நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். 

ஸ்நேக் சாகா தகவல்

முதலில் இரண்டு பாம்பு இருந்ததால், அவரை எந்த பாம்பு கடித்தது என சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்ட நிலையில், லாரி ஓட்டுநர் சமூக வலைத்தளமான முகநூலில் பாம்புகள் தொடர்பான விடியோவை பதிவிடும் ஸ்நேக் சாகா (Snake Saga) என்ற நபருக்கு தொடர்புகொண்டுள்ளார். 

அலட்சியம் வேண்டாம்

பாம்பு கடித்தவருக்கு மூச்சுத்திணறல், வாய்பேச இயலாமை போன்ற அறிகுறி இருந்ததால், அதனை வைத்து அவர் வீரியன் ரக பாம்பு கடித்திருக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்த தகவலை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், மழைக்காலங்களில் பகல்-இரவு நேங்களில் வீடுகளின் கதவை அலட்சியமாக திறந்து வைத்து வெளியே செல்வது நல்லதல்ல என அறிவுறுத்துகிறார். 

கவனமாக இருங்கள்

கிராமப்புறங்களில் பாம்புகளின் நடமாட்டம் எளிது எனினும், நாம் கவனமாக இருப்பதே நமது உயிரை பாதுகாக்கும். அதேபோல, பாம்பு கடித்தால் பயமே கொன்றுவிடும். பதற்றம் இன்றி உடனடியாக மருத்துவமனையில் அனுமதியாகுவது, பாம்பின் அடையாளத்தை சரியாக கணித்திருப்பது நல்லது. 

இதையும் படிங்க: பார்சல் உணவில் கையுடன் வந்த சில்வர் கோட்டிங்., பசிக்கு உணவு வாங்கிய சாமானியனுக்கு பேரதிர்ச்சி.. சென்னை மக்களே கவனம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Facebook #Trending #Snake Saga #tamilnadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story