கறி குழம்பால் வந்த விபரீதம்... கறி குழம்பை விரும்பி சாப்பிட்ட தந்தைக்கு மகனால் நிகழ்ந்த சோகம்...
கறி குழம்பால் வந்த விபரீதம்... கறி குழம்பை விரும்பி சாப்பிட்ட தந்தைக்கு மகனால் நிகழ்ந்த சோகம்...
கும்பகோணம் அருகே நாச்சியார்கோயில் காவல் சரகம் மேலவிசலூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன்தாஸ். இவருக்கு ராமசந்திரன் என்ற மகன் உள்ளார். இராமசந்திரனுக்கு திருமணமான நிலையில் தனது தந்தையிடம் தனக்கு தனியாக ஒரு வீடு வேண்டும் என்று கேட்டு வந்துள்ளார்.
அதற்கு மோகன்தாஸ் எந்த ஒரு முயற்சியும் செய்யாமல் இருந்து வந்துள்ளார். இதனால் பயங்கர கோபத்தில் இருந்து வந்துள்ளார் ராமசந்திரன். இந்த சமயத்தில் நேற்று வீட்டில் கறி குழம்பு வைத்திருந்த நிலையில் சுவையாக இருந்ததால் கறி குழம்பு முழுவதையும் மோகன்தாஸ் சாப்பிட்டு விட்டாத கூறப்படுகிறது.
ஏற்கனவே வீடு விஷயத்தில் தந்தை மீது கோபத்தில் இருந்த ராமசந்திரன் கறி குழம்பு இல்லாததால் ஆத்திரமடைந்து தந்தையில் முதுகில் கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். மயங்கி கீழே விழுந்த மோகன்தாஸை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.