தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகன்! விசாரணையில் மகன் கூறிய அதிர்ச்சி காரணம்!
son killed his mom
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் துரை. சலவை தொழிலாளியான துரையின் மனைவி கோவிந்தம்மாள் (63). இந்த தம்பதிக்கு ஆனந்தன் என்ற மகன் இருந்துள்ளார். ஆனந்தனுக்கு திருமணமாகி 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. ஆனந்தனுக்கு குடி பழக்கம் இருந்துள்ளது. இதனால் மனஸ்தாபம் ஏற்பட்டு அவரது மனைவி ஒரு மாதத்துக்கு முன்னர் தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.
ஆனந்தனின் தாய் கோவிந்தம்மாள், கடந்த 6 மாதமாக உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்தார். இந்தநிலையில் கோவிந்தம்மாளின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அவர், தன்னை கொலை செய்து விடுமாறு பலமுறை மகன் ஆனந்தனிடம் முறையிட்டு அழுததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் ஆனந்தன், தாய் கோவிந்தம்மாள் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த துரை, மனைவி கோவிந்தம்மாள் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கோவிந்தம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ஆனந்தனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், எனது தாய் சில மாதங்களாக உடலநிலை கோளாறுடன் இருந்தார். ஒருகட்டத்தில் என்னை கொலை செய்து விடுங்கள் என கெஞ்சினார். அதனால் எனது தாயை கொலை செய்தேன் என கூறியுள்ளார். இதனையடுத்து ஆனந்தனை சிறையில் அடைத்தனர்.