தந்தை இறந்த நிலையில், தாய்க்கு மகனால் நேர்ந்த கொடூரம்!! அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்தவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
Son killed mother after father dead
சென்னை பள்ளிகரணை சாய்கணேஷ் நகரில் வசித்து வந்தவர் பாலகிருஷ்ணன். அவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு எத்திராஜ் என்ற மகன் உள்ளான். எத்திராஜ் சற்று மன நிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. மேலும் அதனால் அவருக்கு திருமணமாகியும் அவரது மனைவி எத்திராஜ் உடன் வாழ விரும்பாமல் பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் எத்திராஜின் தந்தை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
அதனைத் தொடர்ந்து சரஸ்வதி அவரது மகனுடன் வசித்து வந்தார். மேலும் வயதான தாய் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் எத்திராஜ் நாம் இனி வாழ வேண்டாம். தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூறி வந்துள்ளார். அதனை தொடர்ந்து எத்திராஜ் நேற்று காலை பெற்ற தாய் சரஸ்வதியின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார். அதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சரஸ்வதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் எத்திராஜ், தானும் தற்கொலை செய்து கொள்ள எண்ணி கத்தியால் தனது வயிற்றில் குத்திக்கொண்டார்.
அப்பொழுது கத்தி வயிற்றிலேயே மாட்டிக்கொண்டதால் அவர் வலியால் அலறி துடித்துள்ளார். அவரது அலறல் சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த சரஸ்வதியும், வயிற்றில் கத்தி பாய்ந்த பாய்ந்து அத்தி பாய்ந்து எத்திராஜ் துடிப்பதையும் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அதனை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்கள் எத்திராஜை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சரஸ்வதியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.