சொத்து தகராறில் பெற்ற தந்தையை லாரி ஏற்றி கொன்ற கொடூர மகன்... போலீசார் விசாரணை!!
சொத்து தகராறில் பெற்ற தந்தையை லாரி ஏற்றி கொன்ற கொடூர மகன்... போலீசார் விசாரணை!!
காஞ்சிபுரம் மாவட்டம் தேவரியம்பாக்கத்தை சேர்ந்தவர் எத்திராஜ். இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் செய்து தனது கடமையை முடித்து உள்ளார் எத்திராஜ். இந்நிலையில் எத்திராஜின் இளைய மகன் ராமசந்திரன் தனது தந்தையிடம் தனக்கு உரிய பங்கை நிலத்தை பிரித்து தருமாறு கேட்டு தகராறு செய்துள்ளார்.
ஆனால் ராமசந்திரன் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு ஊதாரியாக சுற்றி திரிந்து வருவதால் எங்கு நிலத்தை பிரித்து கொடுத்தால் அதனையும் விற்று செலவு செய்து விடுவானோ என்ற பயத்தில் நிலத்தை பிரித்து தர முடியாது என்று கூறியுள்ளார் எத்திராஜ். இதனால் மிகுந்த ஆத்திரத்தில் இருந்துள்ளார் ராமசந்திரன்.
தலைக்கேறிய கோபத்தால் ராமசந்திரன் காலையில் வயலுக்கு சென்ற தனது தந்தையை லாரி ஏற்றி கொலை செய்துள்ளார். பெற்ற தந்தை என்று கூட பாராமல் லாரியை ஏற்றி கொலை செய்த ராமசந்திரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.