தந்தை இறந்த நிலையில், தாய் அடிக்கடி செல்போனில் செய்த செயல்! மகன் எடுத்த விபரீத முடிவு!
son suicide for his mom
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வாழைத்தோட்ட தெருவை சேர்ந்தவர் லோகநாதன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு சித்ரா என்ற மனைவியும், சக்திவேல் என்ற 17 வயது மகனும் உள்ளனர்.
லோகநாதன் இறந்த பிறகு சித்ரா அங்குள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சித்ரா அடிக்கடி செல்போனில் அதிகநேரம் யாரிடமோ பேசிவந்துள்ளார். ஆனால் இது சக்திவேலுக்கு பிடிக்காத விஷயமாக இருந்துள்ளது. இதன்காரணமாகவே தாயும், மகனும் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர்.
இந்தநிலையில் இருதினங்களுக்கு முன் சித்ரா செல்போனில் யாரிடமோ சிரித்து கொண்டிருந்துள்ளார். அப்போது சக்திவேல் அவரிடம் சண்டை போட்டுள்ளார். இந்தநிலையில் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த சக்திவேல் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை கொண்டுள்ளார்.
இதனையடுத்து சக்திவேலின் உறவினர்கள் உத்திரமேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.