தலைக்கேறிய குடிபோதை! தாய் என்று கூட பார்க்காமல், தாயின் சேலையை உருவி மகன் செய்த கொடூரச்செயல்!
son tortured his mom
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக, சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடி நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தினார். கடந்த சில வாரங்களாக நாட்டின் சில மாநிலங்களில், ஊரடங்கில் சில விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளது.
அதில் குறிப்பாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் 55 நாட்களாக மது கிடைக்காமல் தவித்து வந்த குடிமகன்கள் டாஸ்மாக் கடையில் வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர். இந்த டாஸ்மாக் கடைகளை திறந்ததால் பெண்கள் கடும் வேதனையில் உள்ளனர். ஊரடங்கின் காரணமாக பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் நேரத்தில் சிலர் மது குடித்துவிட்டு வீட்டில் படுத்தும் பாடு பெண்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது.
அந்த வகையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடை திறந்ததன் காரணமாக, பெற்ற மகனே தாயின் சேலையை உருவி, கிழித்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே பனங்கரை பகுதியை சேர்ந்த வினோ என்ற கூலித் தொழிலாளி டாஸ்மாக் கடை திறக்கும் வரை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருந்துள்ளார்.
ஆனால் டாஸ் மாக் கடை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டவுடன், இவர் மது வாங்குவதற்காக பணம் கேட்டு வீட்டில் தொல்லை செய்து வந்துள்ளார். அரசு வழங்கிய 1000 ரூபாய் நிவாரண தொகையை தன் அம்மாவிடம் கேட்டுள்ளார்.
வறுமையில் உள்ள அவரது தாய் வீட்டின் செலவிற்கு பணம் இல்லை என்று கூறி மறுத்துள்ளார். பணத்தை வீட்டில் எங்கு வைத்தாலும், தேடி எடுத்து விடுவதால், அவர் தன் ஜாக்கெட்டுக்குள் பணத்தை வைத்துள்ளார். ஆனாலும் மது வெறியில், தாய் என்று கூட பார்க்காமல், அம்மாவின் சேலையை பிடித்து இழுத்து, ஆடைகளை களைந்து பணத்தை எடுக்க முயன்றுள்ளார்.
ஒருகட்டத்தில் பணத்தை கேட்டு அவரது தாயின் கழுத்தை நெரித்து பிடித்துள்ளார், இதில் வலி தாங்காமல் அம்மா சத்தம் போடவும், அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்த வினோவிடமிருந்து பத்திரமாக மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.