மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோரால் 4 பேருக்கு மறுவாழ்வு: நெகிழ்ச்சியான சம்பவத்தின் பின்னணி..!
மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோரால் 4 பேருக்கு மறுவழ்வு: நெகிழ்ச்சியான சம்பவத்தின் பின்னணி..!
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த வெளியனூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (19). பொறியியல் கல்லூரி ஒன்றில் பயின்று வந்த இவர், கடந்த 10 ஆம் தேதி தனது நண்பருடன் மோட்டர் பைக்கில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
இந்த நிலையில், திண்டிவனம் அருகே உள்ள விளங்கம்பாடி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கார்மீது நேருக்குநேர் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், மோட்டர் பைக்கில் சரவணனுடன் சென்ற அவரது நண்பர் சிபி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சரவணன் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதற்கிடையே, சிகிச்சை பலனின்றி நேற்று கல்லூரி மாணவர் சரவணன் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து சரவணனுடைய பெற்றோரின் சம்மதத்துடன் சஅவரது உடல் உறுப்புகளான கண்கள், இதயம், கல்லீரல், நுரையீரல் மற்றும் சிறுநீரகங்கள் உள்ளிட்ட உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.
தானமாக வழங்கப்பட்ட சரவணனின் உடல் உறுப்புகள் சென்னை மற்றும் கேரளாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது. இதற்காக சென்னை, கேரளா செல்லும் வழிகளில் போக்குவரத்தை சீர் செய்த காவல்துறையினர், உடல் உறுப்புகளை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் சென்ற வரிகளில் இடையூறு ஏற்படாமல் பாதுகாத்தனர். இதன் காரணமாக4 பேரின் உயிர் காப்பாற்றப் பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.