மூத்த குடிமக்கள் உணவுப் பொருள்களை பெறுவதற்கு ரேஷன் கடைகளில் சிறப்பு ஏற்பாடு...!!
மூத்த குடிமக்கள் உணவுப் பொருள்களை பெறுவதற்கு ரேஷன் கடைகளில் சிறப்பு ஏற்பாடு...!!
மாற்றுத்திறனாளிகள் மற்றும் 65 வயது மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு உணவுப் பொருட்கள் வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கிராமப்புறங்களில் 75 சதவீதம் பேரும், நகர்ப்புறங்களில் 50 சதவீதம் பேரும் மானிய விலையில், உணவுப் பொருட்களை வழங்குவதற்கு தகுதி வாய்ந்தவர்கள் என தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013ல் இடம் பெற்றுள்ள பிரிவுகளின் படி வரையறுக்கப்பட்டுள்ளது.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் படி, உணவு தானியங்களை வழங்குவதற்கு மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை சுமார் 80 கோடி பயனாளிகளுக்கு அந்தியோதயா அன்ன யோஜனா முன்னுரிமை குடும்பங்கள் என்ற பிரிவின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும்.
இந்த உணவு தானியங்களை 65 வயதுக்கு மேல் உள்ளவர்கள், உடல் ரீதியான குறைபாடு உள்ளவர்கள் உணவு தானியங்களைப் பெறுவதற்கு வந்து செல்ல முடியாத நிலை உள்ளதை கருத்தில் கொண்டு இவர்களுக்கு உணவு தானியங்களை சிறப்பு வழிமுறைகளின் மூலம் வழங்குமாறு 2018-ஆம் வருடம் பிப்ரவரி மாதத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பொது விநியோக துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட உணவு தானியங்களை வீடுகளுக்கு நேரடி விநியோகம் செய்வது அல்லது உணவுப் பொருட்களை பயனாளிகளின் அங்கீகாரம் பெற்றவர்கள் மூலம் விநியோகிப்பது போன்ற வழிமுறைகளைக் கையாளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.