நாளை முதல் பள்ளிகள் திறப்பு.! சொந்த ஊர்களை நோக்கி படையெடுக்கும் மக்கள்.! கூடுதல் பேருந்துகள் அறிவிப்பு.!
நாளை முதல் பள்ளிகள் திறப்பு.! சொந்த ஊர்களை நோக்கி படையெடுக்கும் மக்கள்.! கூடுதல் பேருந்துகள் அறிவிப்பு.!
2022-23-ம் கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் நாளை முதல் தொடங்க உள்ளன. இந்தநிலையில் வெளியூர்களில் இருந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கடந்த மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், பலர் குடும்பத்துடன் சுற்றுலா தளங்களுக்கும், உறவினர்களுக்கு வீட்டிற்கும், சொந்த ஊர்களுக்கும் குடும்பத்துடன் சென்றுவிட்டனர்.
இந்தநிலையில், இன்றுடன் விடுமுறை நிறைவடைவதால் பலரும் மீண்டும் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இதன்காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை முதலே ரயில் டிக்கெட்டுகள் கிடைப்பது கடினமாகிவிட்டது. இதன்காரணமாக தனியார் பேருந்து டிக்கெட்டுகள் விலையும் வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.
இதன்காரணமாக பயணிகளின் வசதிக்காக தமிழகம் முழுவதும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சுமார் 250 பேருந்துகளை கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், நாகர்கோவில் போன்ற இடங்களில் இருந்து சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 250 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.