×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இந்த மீன் பார்க்கத்தான் சிறுசு!! ஆனால் இதன் விலையை கேட்டா ஆடிப்போயிடுவீங்க!!அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

பாக்க தான் சின்ன மீனு! ஆனால் இதன் விலையை கேட்ட ஆடிப்போய்டுவோம்! அந்த மீனில் அப்படியென்ன ஸ்பெஷல் தெரியுமா?

Advertisement

நாகப்பட்டினம் அருகே  விசைப்படகு மீனவரான ஜீவா என்பவர் கடலுக்கு  மீன் பிடிக்க சென்றுள்ளார். மீன் பிடிக்கும் போது  அவரது  வலையில் அறியவகை மீனான 25 கிலோ எடையிலான கத்தாழை மீன் ஒன்று சிக்கியுள்ளது.

பிடித்த மீன்களை ஏலம் எடுக்க  வியாபாரிகள் ஆவலுடன் திரண்ட நிலையில், ஜீவா வலையில் சிக்கிய அந்த அறிய வகை கத்தாழை  மீன் 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு  விற்பனையாயுள்ளது.

கத்தாழை மீனின் இறைச்சி கிலோ 500 ரூபாய்க்கு விற்கப்பட்டாலும், அதன் அடி வயிற்றில் உள்ள நெட்டி என்றழைக்கப்படும் காற்றுப்பை ஒயின் மற்றும் மருந்து தயாரிப்பில் மூலப்பொருளாக பயன்படுத்தப்படுவதால் இந்த  வகை  மீன்கள் விலை உயர்ந்த மீன்களாக உள்ளன.

கத்தாழை மீன்கள் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அதிக விலைக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக மீனவர்கள்தெரிவித்துள்ளனர்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#fish #special
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story