×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மகிழ்ச்சியான செய்தி.! நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்.! நாளை முதல் காரைக்குடி-திருவாரூர் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்.!

மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட காரைக்குடியில் இருந்து அகல ரயில் பாதையில் திருவாரூருக்கு ரயில்

Advertisement

மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட காரைக்குடியில் இருந்து அகல ரயில் பாதையில் திருவாரூருக்கு ரயில்கள் இயக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பர்மாவில் வணிகம் செய்து வந்த காரைக்குடி, தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் முயற்சியால் சவுத் இந்தியன் ரயில் கம்பெனி மூலம் காரைக்குடியில் இருந்து திருவாரூர் வரை, திருவாரூரில் இருந்து சென்னைக்கு அதற்கு முன்பே ரயில் வழித்தடம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, அந்த பாதையில் ரயில்கள் இயக்க தென்னக ரெயில்வே அனுமதி அளித்துள்ளது. அதன்படி திருவாரூர் - காரைக்குடி சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் திருவாரூரிலிருந்து காலை 08.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 02.15 மணிக்கு காரைக்குடி சென்று சேரும். மறுமார்க்கத்தில் காரைக்குடி - திருவாரூர் சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் காரைக்குடியிலிருந்து மதியம் 02.30 மணிக்கு புறப்பட்டு இரவு 08.30 மணிக்கு திருவாரூர் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில்கள் மாங்குடி, மாவூர் ரோடு, திருநெல்லிக்காவல், அம்மனூர், ஆலத்தம்பாடி, மணலி, திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, ஒட்டங்காடு, பேராவூரணி, ஆயின்குடி, அறந்தாங்கி, வளர மாணிக்கம், பெரியகோட்டை, கண்டனூர் புதுவயல் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#train #karaikudi #thiruvarur
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story