கும்பகோணம்: 10 ஆயிரம் வாழைப்பழங்களால் அலங்காரம் செய்யப்பட்ட ஆஞ்சநேயர் சிலை...
கும்பகோணம்: 10 ஆயிரம் வாழைப்பழங்களால் அலங்காரம் செய்யப்பட்ட ஆஞ்சநேயர் சிலை...
கும்பகோணம் மாவட்டம் நீலத்தநல்லூர் சாலை காமராஜ் நகர் பகுதியில் விஸ்வரூப ஜெய மாருதி ஆஞ்சநேயர் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் வரும் அமாவாசை திருநாளில் அங்குள்ள ஆஞ்சநேயருக்கு பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில் நேற்று மாசி மாத அமாவாசை திருநாளை ஒட்டி விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரம் வாழைப்பழங்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னர் 10,12 ஆம் வகுப்பு மாணவர்கள் எழுத உள்ள அரசு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறவும், அனைத்து வகை தொழில்களும் மேன்மை பெறவும், உலக மக்கள் நலன் வேண்டியும் சிறப்பு பிராத்தனை செய்யப்பட்டது.
தொடர்ந்து உற்சவர் ராமர், லட்சுமணர், சீதை மற்றும் அனுமாருக்கு சகஸ்ரநாம அர்ச்சனையும், 1001 முறை ராமநாம ஜெபமும் கூறி தீப ஆராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.