மறுபிரேத பரிசோதனை முடிவில் வெளிவந்ததா உண்மை?.. மாணவியின் உடல் இன்று தகனம் செய்யப்படும்? என எதிர்பார்ப்பு..!!
மறுபிரேத பரிசோதனை முடிவில் வெளிவந்ததா உண்மை? மாணவியின் உடல் இன்று தகனம் செய்யப்படும் என எதிர்பார்ப்பு..!!
தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவியின் மர்மமான மரணத்தையடுத்து, மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் மாணவியின் பெற்றோருக்கு உடலைப்பெற்றுக் கொள்ளுமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் மாணவியின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கபடுகிறது.
கள்ளக்குறிச்சி அருகே சக்தி தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்று வந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில், மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவரது பெற்றோர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. நேற்று மாணவியின் உடல் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், பெற்றோர்கள் தரப்பில் யாரும் வராமல் இருந்துள்ளனர்.
பரிசோதனை முடிந்த பின் உடலை பெற்றுக் கொள்ளுமாறு காவல்துறையினர் மாணவியின் பெற்றோருக்கு வேண்டுகோள் விடுத்தும், அவர்கள் எவ்வித பதிலும் கூறாமல் இருந்து வருகின்றனர். இதனையடுத்து இன்று மாணவியின் பெற்றோர் மாணவியின் உடலை பெற்று தகனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மாணவியின் உடல் மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ள காரணத்தால், பிரேத பரிசோதனை அறிக்கை விரைவில் வெளிவரும் அல்லது நீதிமன்ற விசாரணையின் போது வாதத்தில் அறிக்கையாக சமர்பிக்கப்படலாம். அதில் மாணவியின் மரணத்திற்கான காரணம் தெரியவரும்.