×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சிம்புவை பற்றி பேசி ஸ்ரீரெட்டி வெளியிட்டுள்ள வீடியோ; என்ன கூறியிருக்கிறார் பாருங்கள்

சிம்புவை பற்றி பேசி ஸ்ரீரெட்டி வெளியிட்டுள்ள வீடியோ; என்ன கூறியிருக்கிறார் பாருங்கள்

Advertisement

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் உள்ள நடிகர்கள் வாய்ப்புத் தருவதாகக் கூறி தன்னுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டு ஏமாற்றி விட்டதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கூறிய புகார்கள் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சமீபத்தில் வார இதழ் ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் இணையதள ரசிகர்களின் கேள்விக்கு நடிகர் சிம்பு பதில் அளித்தார். 

அப்போது அவரிடம் நடிகை ஸ்ரீரெட்டியும் கேள்வி கேட்டிருந்தார். ‘‘உங்களின் எதிர்கால மனைவியிடம் என்னென்ன தகுதிகளை எதிர்பார்க்கிறீர்கள்?’’ என்று அவர் கேட்டார்.

இதனைத்தொடர்ந்து பெண்கள் அதிகாரம் தொடர்பாக பேசிய சிம்பு: "ஆண்கள் செய்யும் எல்லாவற்றையும் பெண்கள் செய்வதுதான் பெண்கள் முன்னேற்றம், அதிகாரம் என நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், உண்மையில் அது அல்ல. ஒரு பெண்ணாகத்தான் செய்யவேண்டும் என ஆசைப்படும் வி‌ஷயங்களை, செய்ய விடாமல் இந்த சமுதாயம் தடுக்கிறது. அதை செய்ய விடுங்கள் என சண்டைபோடுவதே பெண்களின் அதிகாரம்.

அதற்குத்தான் ஆதரவு தரவேண்டும், ஆண்களுக்கு நிகராக இருப்பதுதான் பெண்கள் முன்னேற்றம் என்பதில்லை. ஏற்கனவே ஆண்களுக்கு நிகராகத்தான் இருக்கிறீர்கள். நீங்களாக ஆண்களுக்கு நிகராக இல்லை என கற்பனை செய்து கொள்கிறீர்கள்.

பெண் என்பதற்கான சில வி‌ஷயங்கள் உள்ளது. வரக்கூடிய மனைவி அந்த புரிதல் உள்ள பெண்ணாக இருந்தால் நன்றாக இருக்கும்" என கூறினார்.

இதில் தனக்கு வரப்போகும் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பது கூறியது ஸ்ரீரெட்டியின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அமைந்தது.

இதைத்தொடர்ந்து சிம்புவை பாராட்டி சமூக வலைத்தளத்தில் ஸ்ரீரெட்டி ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில் ‘‘நன்றி, சிம்பு சார். என் கேள்விக்கு பதில் அளித்ததற்காக... உங்க அப்பா டி.ராஜேந்தரைப் போல் நீங்களும் நல்ல மனிதர். டி.ஆரை நான் மிகவும் மதிக்கிறேன்...’’ என கூறியிருந்தார். 

இதன்மூலம் ஸ்ரீரெட்டியின் பட்டியலில் சிம்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது.



 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#simbu #srireddy #tr #str
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story