குட் நியூஸ்... இனி இவர்களுக்கு அரசு வேலை... தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு...
குட் நியூஸ்... இனி இவர்களுக்கு அரசு வேலை... தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு...
மாநில அளவில் வெற்றி பெறும் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என தமிழக அரசு அசத்தலான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இச்செய்தி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் தமிழகத்தில் விளையாட்டு சங்கங்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை ரூ.3.3 கோடியிலிருந்து ரூ.4 கோடியாகவும், மாநில அளவில் விளையாட்டு போட்டிகளை நடத்த வழங்கப்படும் தொகை ரூ.50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் ஒலிம்பிக் விளையாட்டுக்கு ரூ.20 லட்சமும், ஒலிம்பிக் அல்லாத விளையாட்டுக்கு ரூ.15 லட்சமும் மானியமாக வழங்கப்பட உள்ளது. மேலும் தேசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான பயிற்சி முகாம், அவர்களுக்கு சீருடை ஆகியவற்றுக்கான நிதியும் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.