கொரோனா எதிரொலி.! வீட்டிலிருந்தே மாணவர்கள் கல்வி கற்க புதிய வழியை ஏற்ப்படுத்திய பள்ளி கல்வி துறை..!
Steady with e learn in home
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி மாணவர்களின் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதனால் மாணவர்கள் அனைவரும் கல்வி கற்க முடியாத சூழல் ஏற்ப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வி துறை மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்வி கற்க ஏதுவாக புதிய வழியை ஏற்ப்படுத்தியுள்ளது. அதாவது மாணவர்கள் வீட்டிலிருந்தே இணைய வழியே கல்வி கற்று கொள்ளலாம்.
அதன்படி e-learn.tnschool.gov.in என்ற இணைய தளத்தின் வழியாக மாணவர்கள் வீட்டிலிருந்தே எளிமையாக கல்வி கற்க ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அருமையான வாய்ப்பினை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.