×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

டாஸ்மாக் கடை ஊழியர்கள் அதிக விலைக்கு மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை...!! மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை...!!

டாஸ்மாக் கடை ஊழியர்கள் அதிக விலைக்கு மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை...!! மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை...!!

Advertisement

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, தர்மபுரியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டத்தில் சாராயத்தை ஒழித்தல், கண்காணித்தல், சட்டவிரோத மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தல் போன்றவை தொடர்பான அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தி இவ்வாறு பேசினார்:-

வாரந்தோறும், கள்ளச்சாராயம் மற்றும் சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக, சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் கண்டிப்பாக அனைத்து மதுக்கடைகளிலும் விலைப்பட்டியல் வாடிக்கையாளர்களுக்கு நன்றாகத் தெரியும் வகையில் வைக்கப்பட வேண்டும்.

கூடுதல் விளக்கி மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது. அரசு நிர்ணயித்துள்ள அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யக் கூடாது. 

மேலும் உரை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடந்த வாரத்தில் மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்த மதுக்கடை ஊழியர்கள் 13 பேருக்கு ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

வெளிநபர்களை வைத்து மது கடையில் மது பாட்டில்களை விற்பனை செய்த ஒரு விற்பனையாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது போன்ற விதிமீறல்களில் ஈடுபடும் மதுக்கடை ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். 

மதுக்கடைகளுக்கு அருகே உள்ள பெட்டிக் கடைகளில் தின்பண்டங்கள், தண்ணீர் பாட்டில், டம்ளர் விற்பனை செய்து மது அருந்த அனுமதித்த 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அனுமதியின்றி சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் தாபா ஓட்டல்கள், சந்துக்கடைகள், பெட்டிக்கடைகள் ஆகியவற்றை கண்டறிவதற்காக டாஸ்மாக் மாவட்ட மேனேஜர் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துணை சூப்பிரண்டு, தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூர் துணை காவல் சூப்பிரண்டுகள் அடங்கிய கண்காணிப்பு குழு மூலம் கூட்டு தணிக்கை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படும் மதுக்கடை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதுடன் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil nadu #Dharmapuri #tasmac #Employees Sell Liquor at Higher Prices #District Collector Warning
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story