மேலும் தீவிரமாகும் ஊரடங்கு.! மு.க.ஸ்டாலின் தலைமையில் அதிரடி முடிவு.!
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையிலும், கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. தினசரி பாதிப்பு தற்போது 30 ஆயிரத்தை தாண்டி வருகிறது. இந்தநிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிலையில், அனைத்துக்கட்சி கூட்டம் நிறைவு பெற்றதும் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசுகையில், அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஊரடங்கை கடுமையாக்குதல் தொடர்பாக 5 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர், அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டிய முறைகள் குறித்து பல்வேறு கட்சியினர் தங்களின் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். மக்களின் உயிர் காக்கும் பொறுப்பு அரசிடம் இருக்கிறது. மருத்துவமனைகள் மனிதாபிமானமற்ற முறையில் கடைசி நேரத்தில் நோயாளிகளை வெளியேற்றக் கூடாது என தெரிவித்தார்.