வலுக்கும் வடகிழக்கு பருவ மழை!.. பலத்த சூறாவளியுடன் ராட்சத அலைகள்: ஆர்ப்பரிக்கும் கடல் கொந்தளிப்பு..!
வலுக்கும் வடகிழக்கு பருவ மழை!.. பலத்த சூறாவளியுடன் ராட்சத அலைகள்: ஆர்ப்பரிக்கும் கடல் கொந்தளிப்பு..!
இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும் என்றும், இதன் காரணமாக நாளை மறுநாள் கன்னியாகுமரி , திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, விழுப்புரம், கடலூர் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நகரும் போது, நாளை தென்மேற்கு வங்கக்கடலின் கிழக்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும். நாளை மறுநாள் தென்மேற்கு மற்று அதையொட்டிய மேற்கு வங்க கடல், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா உள்ளிட்ட பகுதிகளில் நாளை முதல் வரும் 11ஆம் தேதி வரை மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
ராமேஸ்வரம் பகுதியில் தற்போது பலத்த சூறாவளி காற்று வீசுவதால், அங்கு கடலில் கொந்தளிப்பும் அதிக நீரோட்டமும் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவக்காற்று தீவிரமடைந்து ராமேஸ்வரம், பாம்பன் மற்றும் தனுஷ்கோடி உள்ளிட்ட தீவுப்பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசெவருகிறது. இதன் காரணமாக ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் பகுதிகளி கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்து வருகிறது.