×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

600 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்தாலும் அரைமணி நேரத்தில் குழந்தையை மீட்க மாணவன் கண்டுபிடித்த அபூர்வ கருவி!

student found borewell rescue machine

Advertisement

சமீபத்தில் திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சுஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து, தீவிர மீட்பு பணி மேற்கொண்டு இறுதியில் சடலமாக மீட்கப்பட்டான். இச்சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது. 

இந்த நிலையில் மதுரையை சேர்ந்த இளைஞர் ஒருவர் வெறும் ரூ.1000 செலவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்பதற்கு ஒரு அற்புதமான கருவியை கண்டுபிடித்துள்ளார். இந்த கருவியை பயன்படுத்தி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை அரை மணி நேரத்தில் மீட்கலாம் என்று அவர் சோதனையும் செய்து காட்டியுள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே ரெங்கசாமிபுரம் என்ற பகுதியை சேர்ந்த மாணவன் முருகன் என்பவர் சிறுவயதில் இருந்தே அறிவியல் கண்டுபிடிப்பில் ஆர்வம் உள்ளவர். இந்தநிலையில் சமீபத்தில் சுஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பரிதாபமாக பலியானதை அடுத்து இதற்கு ஒரு கருவி கண்டுபிடிக்க வேண்டும் என்று முயற்சி செய்து புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

இந்த கருவியின் மூலம் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை அரை மணி நேரத்தில் மிகவும் எளிதில் வெளியே எடுத்துவிடலாம் என்றும் இதற்கான செய்முறை விளக்கத்திற்காக ஒரு குழந்தை எடையுள்ள பொம்மையை குழிக்குள் இறக்கி இந்த கருவி மூலம் அந்த பொம்மையை வெளியில் தூக்கியுள்ளார். மேலும் அவர் கன்டுபிடித்த கருவி மூலம் 600 அடியில் குழந்தை விழுந்திருந்தாலும் மீட்கலாம் என்றும் அவர் கூறினார். அந்த இளைஞனின் கண்டுபிடிப்பை ஒட்டுமொத்த மக்களும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sujith #bore well #rescue machine
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story