விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தூய்மை பணியாளர்.! திடீர் மரணம்.!.. காவல்துறையினரை குற்றம் சாட்டும் உறவினர்கள்.?
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தூய்மை பணியாளர்.! திடீர் மரணம்.!.. காவல்துறையினரை குற்றம் சாட்டும் உறவினர்கள்.?
சென்னையில் விசாரணைக்கு சென்று திரும்பிய துப்புரவு பணியாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. அவரது சாவுக்கு காவல்துறை தான் காரணம் என குடும்பத்தினர் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.
சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் வயது 25. இவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவரது வீட்டு அருகே உள்ள விஜயலட்சுமி என்பவரின் வீட்டில் நகை திருடு போயிருக்கிறது. இது தொடர்பாக ஸ்ரீதரை விசாரிக்க காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.