கொரோனா நிவாரண பணிகளுக்காக பணத்தை அள்ளிக் கொடுத்த சன் டிவி! அதுவும் எத்தனை கோடி பார்த்தீர்களா!!
தமிழகத்தில் கொரோனா பரவலின் 2ஆம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தற்போது ஒரு நாளைக்கு 30 ஆ
தமிழகத்தில் கொரோனா பரவலின் 2ஆம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தற்போது ஒரு நாளைக்கு 30 ஆயிரத்திற்கு மேலானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனாவை எதிர்கொள்வதற்கு ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆர்.டி.பி.சி.ஆர் கிட்டுகள், தடுப்பூசிகள் போன்ற பல மருத்துவக் கருவிகளை வாங்குதல் என கொரோனா நிவாரண பணிகளுக்கு பெருமளவில் நிதி தேவைப்படுகிறது. இதனைத்தொடர்ந்து முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க திரைப் பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் நிவாரண நிதிகளை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சன் குழுமத்தின் சார்பாக கலாநிதி மாறன் தனது மனைவி காவேரியுடன் தமிழக முதல்வர் ஸ்டாலினின் இல்லத்திற்கு சென்று நிவாரண நிதிக்காக 10 கோடிக்கான காசோலையை வழங்கியுள்ளார். அப்பொழுது அவரது மனைவி துர்காவும் உடன் இருந்துள்ளார். இதனை சன் குழுமம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.