தீபாவளி பண்டிகைக்கு வேட்டு வைத்த உச்சநீதிமன்றம்!!
தீபாவளி பண்டிகைக்கு வேட்டு வைத்த உச்சநீதிமன்றம்!!
தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற பண்டிகையாகும். இது இந்து, சீக்கியம், சைனம் மற்றும் பௌத்தம் மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும்.
இப்பண்டிகை இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் வெவ்வேறு நாட்களில் இந்த பண்டிகையானது கொண்டாடப்படுகிறது.
அந்தவகையில், இந்த வருடம் நவம்பர் மாதம் 12 ஆம் தேதி அன்று தீபாவளி கொண்டாடப்பட இருக்கிறது. பொதுவாகவே தீபாவளி என்றாலே பட்டாசு தான் அனைவருக்கும் நினைவில் வரும்.
அது போக, காலையில் எழுந்து எண்ணெய் வைத்து நீராடி, புத்தாடை உடுத்தி, வழிபாடு செய்து விட்டு, இட்லி கரி குழம்பு சாப்பிட்டு, வாங்கி வைத்திருந்த பட்டாசுகளை வெடித்து நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும் நாள் தான் தீபாவளி.
இந்த நிலையில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத பட்டாசுகளை வெடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பேரியம் மற்றும் சரவெடி பட்டாசுகளுக்கு அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.