ஆண் சீடரை கதற கதற பாலியல் கொடுமை செய்த நித்தியானந்தா!. வெளியான வீடியோ ஆதாரம்!.
Swami Nithiyanantha sexual torture
கடந்த சில தினங்களாக சில பிரபலங்கள் மீது, பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக "மீ டூ" மூலம் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் சாமியார் நித்யானந்தாவும் சிக்கியுள்ளார்.
பலமுறை பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள சாமியார் நித்யானந்தா மீது ஆண் சீடர் ஒருவர் பாலியல் புகார் கூறிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில் ஆண் சீடர் கூறுகையில், 2014 ஆம் ஆண்டு மே மாதம் நித்யானந்தர்வால் தான் கபளீகரம் செய்யப்பட்டதாகவும், நெற்றியில் கைவைத்து "எனர்ஜி தர்ஷன்" என்ற பெயரில் தன்னை கதற கதற கபளீகரம் செய்ததாகவும் கூறியுள்ளார்.
தற்போதுதான் எனக்கு இந்த உண்மையை வெளியே சொல்ல தைரியம் வந்தது, பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை சொல்வது போல, மீடூ மூலம் நானும் எனக்கு நேர்ந்த உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்துகிறேன் என கூறியுள்ளார்.