×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பொதுமக்கள் தேவைகளை கூற.. தாம்பரம் மாநகராட்சி மேயர் வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு!!

பொதுமக்கள் தேவைகளை கூற.. தாம்பரம் மாநகராட்சி மேயர் வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு!!

Advertisement

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை, தேவைகளை குறித்து தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண், வாட்ஸ்அப் எண், இணையதள முகவரி ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. 

சென்னை, தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் மேயர் வசந்தகுமாரி திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்பொழுது அவரிடம் மக்கள் பலரும் பல கோரிக்கைகளை வைத்தனர். அதாவது, பூங்காக்களை பராமரிப்பது, குடிநீர் விநியோகம், தெருவிளக்குகளை பராமரிப்பது, சாலை பராமரிப்பு மற்றும் குப்பைகளை அகற்றுவது போன்ற பல தேவைகளை நிறைவேற்ற வேண்டி கோரிக்கை வைத்துள்ளனர். 

அதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் பேசிய மேயர் வசந்தகுமாரி, தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். பொதுமக்கள் தங்களது தேவைகளை தெரிவிக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 4355, வாட்ஸ்அப்எண் – 8438353355, இணையதள முகவரி  tambaramcorpgrievance@gmail.com ஐ தொடர்பு கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tambaram #phone number
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story