பேருந்து நிலையத்தில் பனிக்குடம் உடைந்து வலியால் துடித்த கர்ப்பிணி! சரியான நேரத்தில் உதவிய தமிழ் பெண்!
tamil girl helped to pregnant lady
தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட கோமதி நாராயணன் என்பவர் மலேசியாவில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரின் வயது 27 இந்தநிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு பேருந்து நிலையம் அருகே பணியில் ஈடுபட்டுள்ளார்.
அந்த சமயத்தில் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த இந்தோனேசியாவை சேர்ந்த பெண் ஒருவர் திடீரென பிரசவ வலியால் துடிக்க ஆரம்பித்துள்ளார். அடுத்த சில நொடிகளில் அவருடைய பனிக்குடமும் உடைந்துள்ளது.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸிற்கு தகவல் கொடுத்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமானதால், பணியில் இருந்த கோமதி கர்ப்பிணியை வாடகைக்காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவனைக்கு சென்றுள்ளார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே காரில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
அதன்பின்னர் மருத்துவமனைக்கு சென்று தாயையும், குழந்தையும் மருத்துவமனையில் சேர்த்தார் கோமதி. இந்த நிலையில் கோமதி மற்றும் ஓட்டுனரை மலேசிய அரசு கௌரவப்படுத்தியுள்ளது. அவர்கள் இருவரையும் நாம் நாட்டின் ஹீரோ எனவும், கோமதியை மற்ற காவலர்களும் பின்பற்ற வேண்டும் எனவும் உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் இருவருக்கும் பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கி கௌரவித்தனர்.