×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கண்கலங்கவைக்கும் இன்றைய கொரோனா இறப்பு எண்ணிக்கை..! இதுவரை இல்லாத அளவுக்கு பலி.! மொத்த பாதிப்பு விவரம்.

Tamil Nadu and Chennai todays corona update

Advertisement

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,860 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவ தொடங்கியதில் இருந்து அன்றாட நிலவரம் மற்றும் பாதிப்புகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை விவரங்களை வெளியிட்டுவருகிறது.  வகையில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 5,860 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,32,105 ஆக உயர்ந்துள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று ஒரே நாளில் 1179 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 127 பேர் (அரசு மருத்துவமனை - 83, தனியார் மருத்துவமனை - 44) பலியாகியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 5,641ஆக உயர்ந்துள்ளது.

சற்று ஆறுதலாக இன்று ஒரேநாளில் 5,236 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 2,72,251 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 54,213 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corona #tamil nadu #chennai
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story