மனைவியுடன் சேர்ந்து கொள்ளை நாடகமாடிய வடமாநில ரயில்வே ஊழியர்.! ஒரே நாளில் அம்பலப்படுத்திய ரயில்வே போலீசாருக்கு டிஜிபி பாராட்டு.!
மனைவியுடன் சேர்ந்து கொள்ளை நாடகமாடிய வடமாநில ரயில்வே ஊழியர்.! ஒரே நாளில் அம்பலப்படுத்திய ரயில்வே போலீசாருக்கு டிஜிபி பாராட்டு.!
சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் கடந்த 3ஆம் தேதி அன்று டிக்கெட் கவுன்ட்டர் நீண்ட நேரமாக திறக்கப்படாததால் சந்தேகமடைந்த பயணிகள் கவுன்ட்டருக்குள் எட்டிப்பார்த்த போது ஊழியர் கட்டிப்போட்டிருப்பது தெரியவந்தது.
துப்பாக்கி முனையில் தன்னை கட்டிப்போட்டு விட்டு டிக்கெட் கவுண்ட்டரில் இருந்த ரூபாய் ஒரு லட்சத்து 32 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றதாக ரயில்வே பயணச் சீட்டு விற்பனையாளர் டீக்கா ராம் மீனா ரயில்வே போலீசாரிடம் தெரிவித்தார். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், டிக்கெட் கவுண்டரில் பணியாற்றும் ஊழியரான வடமாநிலத்தை சேர்ந்த டீக்காராமே தனது மனைவியுடன் சேர்ந்துகொண்டு பணத்தை கொள்ளையடித்துவிட்டு நாடகமாடியது விசாரணையில் தெரியவந்துது.
இதையடுத்து டீக்காராமையும், அவரது மனைவியையும் போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். இதனையடுத்து சிறப்பாகவும் விரைவாகவும் விசாரணை நடத்தி நாடகத்தை அம்பலப்படுத்தி கைது செய்த ரயில்வே காவல்துறை டிஐஜி ஜெயகவுரி தலைமையிலான தமிழக ரயில்வே போலீசாரை தமிழ்நாடு காவல் துறை இயக்குனருக்கும் சட்டம் ஒழுங்கு டிஜிபியுமான சைலேந்திர பாபு நேரில் அழைத்து பாராட்டி பண வெகுமதி அளித்தார்.