×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பெண் எஸ்பி-க்கு பாலியல் தொல்லை... ஐஜி மீது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு அனுமதி.!

பெண் எஸ்பி-க்கு பாலியல் தொல்லை... ஐஜி மீது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு அனுமதி.!

Advertisement

பெண் எஸ்பி-க்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் போலீஸ் ஐஜி மீது   சிபிசிஐடி போலீசார் உச்சநீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதற்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசும் ஆளுநரும் அனுமதி அளித்துள்ளனர்.

தமிழக காவல்துறையில் ஈரோடு அதிரடிப்படை ஐஜி-யாக இருந்து வருபவர் முருகன். ஐபிஎஸ் அதிகாரியான இவர்  லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றியபோது இவருக்கு கீழ் பணிபுரிந்த ஐபிஎஸ் அதிகாரியான பெண் எஸ்பி மீது பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து இருக்கிறார்.

குறிப்பாக 2017 முதல் 2018 காலகட்டத்தில்  தனக்கு செல்போனில் ஆபாச தகவல்களை அனுப்பியதாகவும்  தன்னை அவரது அறைக்கு அழைத்து தன்னிடம் அத்துமீறி  நடந்து கொண்டதாகவும் புகார் செய்திருந்தார். இது தொடர்பான விசாரணை தெலுங்கானாவில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த வழக்கை தமிழகத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு எதிராக ஐஜி முருகன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் பெண் எஸ்பி-யின் விருப்பப்படி இந்த வழக்கு தமிழகத்தில் நடைபெறும் எனக் கூறி ஐஜி  2021 ஆம் ஆண்டு முருகனின் மனுவை தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி இந்த வழக்கை விசாரித்து வந்தது. மேலும் குற்றம் சாட்டப்பட்ட ஐஜி  முருகன் ஒரு ஐபிஎஸ் அதிகாரி என்பதால்  குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு மாநில அரசின் அனுமதியையும் ஆளுநர் அனுமதியையும் கேட்டது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு மற்றும் ஆளுநரை ஒப்புதலை பெற்று சிபிசிஐடி அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #Sexual Harassment #IG #LADY SP #CHARGE SHEET FILE
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story